என்னோட விளையாட்டு என்னை விட்டு போகாது... பிரியாவின் உருக்கமான பதிவு!

 
பிரியா

என்னோட விளையாட்டு என்னை விட்டு போகாது... சீக்கிரமா வந்துருவேன்.. மாஸ் எண்ட்ரி கொடுப்பேன்.. என்று அத்தனை கனவுகளுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொண்ட ஒரு பெண்ணை அலட்சியத்தால் புதைத்து திரும்பி இருக்கிறோம்.

கோடி கோடியாய் வெறும் பணத்தை மட்டுமே சம்பாதித்து, மனிதத்தை மறந்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? எதிரிக்கும் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் திரையில் மட்டும் தான் காட்சியளிப்பார்களா? பிரியா வயதில் உங்களுக்கு மகளோ, பேத்தியோ இருக்க மாட்டாளா? இத்தனை அலட்சியமாய் ஒரு கால்பந்து வீராங்கனையின் கால்களை எடுக்கும் அளவுக்கு சென்றதே உங்கள் அலட்சியத்தை பறைசாற்றுமே...

சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது மோகம்.. எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற துடிப்பு. மகளின் கனவை நனவாக்க குடும்பமே தன்னை அர்ப்பணித்து கொண்டது. எந்த நேரமானாலும், எந்த இடமானாலும் பயிற்சியோ, போட்டியோ அழைத்து செல்லவும், அவரை சாதிக்க வைக்கவும் அவரது அண்ணன்களும், பெற்றோரும் உழைத்தனர். ஆனால் ஒரே ஒரு தவறான அறுவை சிகிச்சையால் அத்தனை கனவும் வீணாய் போனது.

சென்னையில் வியாசர்பாடியில் வசித்துவரும் தம்பதி ரவிக்குமார்-உஷாராணி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இதில் மகள் பிரியா சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். மிகுந்த ஏழையான குடும்பமாக இருந்தாலும் மகளின் கனவை நனவாக்க 6ம் வகுப்பு முதல் ப்ரியாவை பள்ளி கால்பந்து குழுவில் சேர்த்து விட்டனர். ஆர்வத்துடன் திறமையும் சேர்ந்து இருந்ததால் பிரியா விரைவில் முன்னேற்றம் பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கியிருந்தார். 

கால்பந்து வீராங்கனை பிரியா தேசிய அளவிலான  விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை பெற்றுள்ளார். இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது.

ப்ரியா

மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் பிரியாவுக்கு காலில் வலி மட்டும் குறையவே இல்லை . இதனால் மறுபடியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று செய்த பரிசோதனையில் காலில் தசைகள் அனைத்தும் அழுக கூடிய நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற விட மருத்துவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் காலை அகற்ற அவர்கள் சம்மதித்தனர். இதனை தொடர்ந்து கால்பந்து வீராங்கனையின் கால்களை மருத்துவர்கள் அகற்றப்பட்டது.

மருத்துவர்களின் அலட்சிய போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் எனக்கூறி பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களின் மகளின் வாழ்வாதாரம் கருதி அரசு வேலை அமைத்து தரவேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரியா

இதற்கிடையே மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் . இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு காலில் சரியாக கட்டு போடாமல், இறுக்கமாக, அலட்சியமாக போட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்த அறிக்கையில் இந்த அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் எத்தனைப் பேரை இடைநீக்கம் செய்வார்கள்? எத்தனைப் பேருக்கு இழப்பீடும், அரசு பணியும் கொடுப்பார்கள்? பிரியாவின் உயிருக்கு, கனவுகளுக்கு, லட்சியங்களுக்கு இது தான் பதிலா? சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே இந்த லட்சணம் என்றால், வெளி மாவட்டங்களில் உள்ளஇந்த சமூகத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்களே இன்னும் குறையாத நிலையில், அரசுத்துறையில் இருப்பவர்களும் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web