உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கி வளாகத்தில் மர்ம டிரோன்!! பரபரத்த தலைநகரம்!!

 
டிரோன்

காவல்துறையில் பாதுகாப்பிற்காக டிரோன்கள் மூலம் முக்கிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தனியார் டிரோன்கள் அனுமதியின்றி அரசு கட்டிடங்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பட்டப்பகலில் சென்னையில் உயர்நீதிமன்றம் மற்றும்  ரிசர்வ் வங்கி கட்டிடத்திற்கு மேலே நேற்று மர்ம டிரோன் ஒன்று நீண்ட நேரமாக பறந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார், உடனடியாக சட்டக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ட்ரோன்

இதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சட்டக்கல்லூரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையின் இறுதியில், மர்ம டிரோனை பறக்க செய்தது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எட்வர்டு கிளாரன்ஸ் என்ற வாலிபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், சென்னை பெரம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றை டிரோன் மூலம் படம் எடுத்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து ஒரு ஆவலில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற முக்கியமான கட்டிடங்களை படம் பிடித்ததாகவும் கூறினார். இருப்பினும் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

ட்ரோன்

இதைத்தொடர்ந்து கர்நாடக வாலிபரின் டிரோனை போலீசார் பறிமுதல் செய்து வேறு எந்தெந்த முக்கிய கட்டிடங்களை படம்பிடித்து இருக்கிறார் எனறு ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது கர்நாடக வாலிபர் எட்வர்டு கிளாரன்ஸ் மீது சட்டக்கல்லூரி போலீசார், உரிய அனுமதி இல்லாமல் டிரோனை பறக்க விட்டதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web