ஜல்லிக்கட்டு மாடுகளை திருடும் மர்ம கும்பல்!! பகீர் சம்பவம்!!

 
ஜல்லிக்கட்டு மாடுகள்

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரையில் இரவு நேரங்களில் ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் பசுமாடுகள் திருடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் கடந்த ஒருவாரமாக நள்ளிரவு நேரங்களில்   மாடு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதனை தடுக்க நகரின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மாடுகள்

இதனிடையே செல்லூரை அடுத்த களத்து பொட்டலை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர், தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை தனது வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மினி வேனில் வந்து அந்த ஜல்லிக்கட்டு காளையை மினி வேனில் ஏற்றி சென்றனர். இந்த காட்சிகள் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாடு திருடு போனது குறித்து பொன்னம்பலம் செல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மாடுகள்

இதே போல, பொதும்பு பகுதியில் செல்வம் என்பவரின் வீட்டின் முன்புறம் கட்டியிருந்த பசு மாட்டையும் இதே மர்ம கும்பல் மினி வேனில் ஏற்ற முயன்றபோது, மாடு சத்தமிட்டதால் அப்பகுதிவாசிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனே, மர்ம கும்பல் வேனை எடுத்து தப்பி சென்றது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரையில் கடந்த 2 நாட்களில் 5-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் திருடு போனதால் மாட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மாடுகள் திருடு போவது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு மாடு திருடிய மர்ம கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.

From around the web