அட!! முதல்வர் கொடுத்த ரூ10 லட்சத்தை அவருக்கே திருப்பி கொடுத்த நல்லகண்ணு!! குவியும் பாராட்டுக்கள்!!

 
நல்லகண்ணு


தமிழகம் மற்றும் தமிழினத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இந்த விருதை  சிபிஐயின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு வழங்கப்பட்டது.நாடு முழுவதும் இன்று  75வது சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்லகண்ணு

தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித சார்ஜ் கோட்டையில் தேசிய கொடி முதல்வர்  கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில் துறை சார்பில் பலருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அப்போது, தகைசால் தமிழர் விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தகைசால் விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன் தன்னுடைய நிதியாக ரூ5000யும் சேர்த்து   தமிழக அரசுக்கு வழங்கினார் நல்லகண்ணு.

ஸ்டாலின்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழக அரசால் வழங்கப்பட்ட “தகைசால் தமிழர் விருது  மிகவும்  பெருமைக்குரிய விஷயம். அதே நேரத்தில் முதல்வர் கொடுத்த ரூ.10லட்சம்  எனக்கு தேவைப்படாது. இதனால்  என்னிடம் இருந்த ரூ.5000ம் சேர்த்து 10.05 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு கொடுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். அவரது இந்த செயலுக்கு  பெரும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web