தேசிய விருதுகள் இப்போ காமெடியாயிடுச்சு.. லிஸ்ட்ல நல்ல படங்களில்லை! இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பளீர்!

 
சூரரை போற்று

தேசிய விருதுகள் லிஸ்ட்டில் சிறந்த படங்கள் இல்லாதது மிக பெரிய அநியாயமாகவே பார்க்கிறேன்... ப்ளாக்பஸ்டர் படங்களுக்கே தேசிய விருதுகளைத் தருகிறார்கள் என்று தேசிய விருதுகள் குறித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

பிரபல, திறமையான நடிகர்கள் இயக்குநர்கள் கமிட்டியில் நடுவர்களாக இருந்தார்கள். இப்போது யார் நடுவர்களாக இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார். இப்போது ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழா இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கேரளாவில் நடைபெற்றது. இந்த விழாவை பல முறை தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘தேசிய திரைப்பட விருது கமிட்டியில் ஒரு காலத்தில் நாட்டின் புகழ்பெற்ற இயக்குனர்கள், விமர்சகர்கள் மற்றும் கலைஞர்கள் நடுவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சினிமா என்ன என்பதை புரியாதவர்கள். கண்மூடித்தனமாக விருதுகளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இலவசமாக வாரி வழங்கி வருகிறார்கள். அவர்கள் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்பது கூட தெரியவில்லை. சினிமா உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் கேரளாவை ஒதுக்கி வைக்க மிகப்பெரிய சதி நடந்து கொண்டு இருக்கிறது. 

அடூர் கோபாலகிருஷ்ணன்

சிறந்த படங்களுக்கு விருதுகளை தருவதை தவிர்த்து, பிளாக்பஸ்டர் படங்களுக்கே தருகிறார்கள். இவற்றை எல்லாம் நினைக்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது. இப்படி ஏன் நடக்கிறது? என்று கேள்விக் கேட்டக் கூட ஆள் கிடையாது. அப்படி கேட்கவும் முடியாது. ஆனால் இவை எல்லாம் பெரிய அநியாயம் என்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்’’ என்று கூறினார்.

சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடூர் கோபாலகிருஷ்ணனின் இந்த பேச்சு பெரும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. தமிழில் ‘சூரரைப் போற்று’ 5 விருதுகள் பெற்றுள்ளது. அதே போன்று மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற திரைப்படம் 3 விருதுகளையே பெற்றுள்ளது. இவற்றை ஒப்பிட்டுத்தான் அவர் பேசியிருப்பார் என்று விழாவிற்கு வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டதை பார்க்க முடிந்தது.

தேசிய விருது

தேசிய விருதுகள் தேர்வு கமிட்டியை பிரபல மலையாள இயக்குனர் என்ற முறையிலும் பல முறை தேசிய விருது பெற்றவர் என்ற முறையில் விமர்சித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web