தேசிய விருது பெற்ற பிரபல பாடகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

 
சுப்பண்ணா

தேசிய விருது பெற்ற பிரபல கன்னட மொழி பாடகர் சுப்பண்ணா காலமானார். கன்னடத்தில் கவிதைகளை இசையமைக்கும் வகையிலான ‘சுகம சங்கீதா’ துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட சிவமொக்கா சுப்பண்ணா. ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் குவேம்பு எழுதிய பாடல்களின் மூலம் சுப்பண்ணா பிரபலமானார். குவேம்பு எழுதிய பாரிசு கன்னட டிண்டிமாவா பாடலைப் பாடிய பிறகு அவர் கர்நாடகாவில் பிரபலமானார்.

சுப்பண்ணா

1979-ம் ஆண்டு வெளியான ‘காடு குதுரே’ என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் ‘காடு குதுரே ஓடி பந்திட்டா’ என்ற பாடலைப் பாடியதற்காக சுப்பண்ணா தேசிய விருதைப் பெற்றார். பின்னணி பாடலுக்காக தேசிய விருதை வென்ற முதல் கன்னட மொழிப் பாடகர் சுப்பண்ணா ஆவார்.


கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சுப்பண்ணா நகரில் உள்ள ஜெயதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவர் ஒரு வழக்கறிஞராகவும் நோட்டரியாகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் எஸ். பாகேஸ்ரீ உள்ளனர். இவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web