இன்று இந்தியா முழுவதும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி!! அரசு விழாக்கள் ரத்து!!

 
எலிசபெத்

உலகில் மிக நீண்ட காலங்களாக, சுமார் 70 ஆண்டுகள் அரியணையை மகாராணியாக அலங்கரித்தவர் எலிசபெத். னினும் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் விக்டோரியா ராணி மட்டுமே 63 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்தார்.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) 11 மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று உள்ளார்.

ராணி எலிசபெத்

இந்நிலையில் 2ம் எலிசபெத் அந்த சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார். 1947 ல் 2ம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் 2ம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவரது கணவர் பிலிப் 99 வயதில் காலமானார். இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் மறைவையடுத்து, 73 வயது கொண்ட அவரது மகன் சார்லஸ் அடுத்த மன்னராக பதவியேற்று உள்ளார். 

ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணியாக இவர் பொறுப்பேற்ற பிறகு, 14 பிரதமர்கள் இவரது காலத்தில் ஆட்சி செய்தனர். இவர் 16 நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார். இறுதியாக அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி என்பது அந்நாட்டின் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸ் என்பவர் 2ம் எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றது தான்இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள், அரசர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் எலிசபெத்தின் மறைவிற்காக துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று இந்தியாவில் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இன்று அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!