நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் பெற்று தந்த  நீரஜ் சோப்ரா

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில்  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்  22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில்  கலந்து கொண்டு விளையாடி வருகிறது.  ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தனது 4வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்தார்.


இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனால் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலக தடகள போட்டியில்  பதக்கம் வென்றது.  வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பலத்த  காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

நீரஜ் சோப்ரா  காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகலாம். இதனால்  காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.  ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள  மாட்டார்  என்ற தகவலால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web