சாதியால் சரியும் நேருவின் சாம்ராஜ்யம்! மதனின் மன்மத லீலைகள்!

- மகரன்
 
நேரு

மலைக்கோட்டை மாமன்னன் என்றழைக்கப்படும் மீசை நாயகன் கே.என்.நேரு திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக கால் நூற்றாண்டுகளாக வலம் வருபவர்.  ‘வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வருவதில் ஜெகஜாலக்கில்லாடி’ என கலைஞரின் வாயாலே புகழப்பட்டவர். 1996 முதல் 2001 வரை மலைக்கோட்டை மாநகரை மலைக்க வைத்தவர். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அதிகாரத்தை பிடித்த திமுக அமைச்சரவையிலும் தொடர்ந்து தவறாது அங்கம் வகிப்பவர். ஆட்சியைப் பிடித்து ஒன்றரை ஆண்டுகள் ஓடி விட்டது என்றாலும் தற்பொழுதும் உள்ளாட்சி அமைச்சராக அழகு பார்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.

அவரது சசோதரர் ராமஜெயம் தான் மூளை என சொல்லப்பட்டாலும் அவரின் படுகொலைக்குப் பின் ஏகப்பட்ட மாற்றங்கள். ராமஜெயத்திற்கு சகலமுமாக இருந்த சகலை மகன் வினோத் ஓரங்கட்டப்பட்டு விட்டார். அங்கன்வாடிப் பணியாளர் முதல் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை அனைவருக்கும் அத்துப்படி வினோத். அவர் ஓரங்கட்டப்பட்டபின், அந்த இடத்திற்கு தற்பொழுது புதிதாக வந்திருப்பவர் மதன் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு  கே.என். நேரு வருத்தம்!

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பாலையா பேசும் வசனம் நினைவுக்கு வருகிறதே என்கிறார்கள். அப்படி என்ன வசனம் எனத் தானே கேட்கிறீர்கள்?  அடேங்கப்பா ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே? அது தாங்க சரி... அப்படி என்ன தான் நடக்கிறது?

செய்தித் துறையில் கோலோச்சிய பாண்டிய மன்னன். அவர் ஓய்வு பெற்றபின் இத்தனை நாட்களாக வேலை பார்த்து விட்டேன். வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. உங்களுக்கு துணையாக உங்களுடனேயே இருக்கும் நாட்களை கழித்து.விடுகிறேன் எனக் கூற, நம்மவர் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் அமைச்சரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மதன் வகையறா,  நாயை விரட்டுவது போல அவரை விரட்டச் சொல்லியிருக்கிறார். நொந்து நூடுல்ஸ் ஆனாவர் அருகே இருந்த அனுமார் கோவிலில் கும்பிட்டு விட்டு சொந்த ஊருக்கு நடையைக் கட்டியிருக்கிறார். 

அடுத்த நிகழ்வு... அவர் ஒரு டி.எஸ்.பி., திருச்சியில் தற்பொழுது பணியாற்றி வருகிறார், அமைச்சரின் மீது அளவுக்கு மீறிய பாசம் கொண்டவர். டம்மியாக பதவியில் உட்கார்ந்து இருக்கிறார். திருச்சியில் அமைச்சரை சந்தித்தால் ஏடாகூடமாக எவர் கண்ணிலாவது பட்டு விடுவோமோ என எண்ணி சென்னை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இவரை மதன் வகையறா விரட்டியடிக்க முற்பட அந்த காட்சி அமைச்சர் கண்ணில் பட, ‘யோவ் அவரு நம்ம ஆளுய்யா... விடுங்கய்யா...’ என மீசையை முறுக்கி விட்டிருக்கிறார். டி.எஸ்.பி தன்னோட மனக் குமுறலை கொட்ட உன் நிலமை பரவாயில்லை என் கதையை கேட்டா கண்ணீர் விட்டிருவ என சமாதானம் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். சரி சரி சென்னை வரைக்கும் வந்துட்டோம்னு சாந்தோம் சர்ச்சுக்கு சென்று ஏசப்பா என்னை காப்பாத்தப்பா என வேண்டி விட்டு டிஜியிடம் பெட்டிஷனை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

கேஎன் நேரு

எல்லாம் சரி யாரு இந்த மதன்? அவருக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்?  

நல்லா கேட்டீங்க போங்க... நேருவின் மகன் அருணுக்கு அனைத்தும் மதன் தானாம். முசிறி மேற்கு ஒன்றிய செயலாளார் ராமச்சந்திரனோட மகன் தான் இந்த மதனாம். மதனோட அம்மா முசிறி யூனியன் சேர்மன். பேரு மாலா. அமைச்சரோட உறவினர்னு சிலர் சொல்றாங்க. சிலர் அதெல்லாம் இல்லீங்க சாதிக்காரங்க தான்னு சொல்றாங்க. ஆனா ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்க மாட்டேங்குது.

இவருக்கு ஏன் இவ்வளவு செல்வாக்குனு? பொதுவாக சாதி பார்க்காதவர் நேரு என்பார்கள் ஆனால் இப்போ சாதியால் நேருவின் சாம்ராஜ்யம் சரிந்து விடும் போல என கண்ணை கசக்கும் உடன்பிறப்புக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அது சரி விலை உயர்ந்த கார் ஒன்றை சமீபத்தில் வாங்கினாரே அதை திருச்சியில காணுமே இப்ப அந்த காரை யார் வச்சிருக்காங்க அதான உங்க கேள்வி எல்லாம் அந்த சபரீகிரி வாசனுக்கே வெளிச்சம்.

பொதுக் குழுவில் ஸ்டாலின் கதறியது போல ஒரு பக்கம் மகேஷ் பொய்யாமொழி தரப்பு குடைச்சல்... இன்னொரு பக்கம் சாதிக்காரர்கள் குடைச்சல்... தாக்குப்பிடிப்பாரா நேரு என்பது தான் மலைக்கோட்டை மாநகரில் இன்றைக்கு எதிரொலித்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web