நேபாள தேர்தல்… இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு…!

 
ராஜீவ் குமார்

நேபாளத்தின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நேபாளத்தில் நவம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏழு மாகாண சட்டசபைகளில் 550 உறுப்பினர் இடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

ராஜீவ் குமார்

இந்நிலையில்,  இந்த தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று, நவம்பர் 18 முதல் 22 வரை ராஜீவ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழு நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறது. ராஜீவ் குமார் தமது பயணத்தின் போது நேபாள தலைநகர் காட்மாண்டுவில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வார்.

ராஜீவ் குமார்

அண்டை நாடுகளின் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்வதன் மூலம் தேர்தல் நடத்தை முறைகளில் புதுமையை புகுத்த முடியும் என்றும், இதுபோன்ற திட்டம் இந்தியாவிலும் இருப்பதாகவும், பொதுத் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களை பார்வையிட சர்வதேச பார்வையாளர்கள் அழைக்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

From around the web