நேதாஜிக்கு விழா.. மகள் கடுமையாக எதிர்க்க காரணம் என்ன?

 
நேதாஜி
சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் நாளை(ஜனவரி 23) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள சாகித் மினார் மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக ஜெர்மனியில் வசித்துவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் பாஃப் இடம் செய்தி நிறுவனம் ஒன்று தொலைப்பேசி வாயிலாக பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் கூறியதாவது, நேதாஜி போதித்த அனைத்து மதங்களையும் மதிக்கும் கொள்கையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவற்றால் பிரதிபலிக்க முடியாது. நேதாஜி ஒரு இந்துவாக இருந்த போதிலும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
நேதாஜி
பல்வேறு மத பற்றாளர்களிடையில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு அவர் ஆதரவாக இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இரு தரப்பிலும் ஒரு எளிய முத்திரையை வைக்க விரும்பினால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி ஒரு இடதுசாரி.
ஆர்எஸ்எஸ் குறித்து நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் கொள்கையும் நேதாஜியின் கொள்கையும் எதிரெதிர் துருவங்கள். அவை ஒத்துப்போக முடியாதவை. நேதாஜியின் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் பின்பற்ற விரும்பும் என்றால் அது மிகவும் நல்ல விஷயம். பல்வேறு பிரிவினர் பல்வேறு வகையில் நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகின்றனர். அவர்கள் நேதாஜியின் கொள்கைகளுடன் உடன்படுவது மிகவும் அவசியம்.
நேதாஜி
இரண்டாவதாக, நேதாஜியை பெருமைப்படுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியும் முதலில் அவர்களின் நலனை பேணுவார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நேதாஜி தற்போது உயிருடன் இருந்து, இந்த அரசாங்கத்திடமிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார் என்றால், பாஜக நிச்சயம் அவரை பெருமைப்படுத்தாது. இப்போது அவரைக் கொண்டாடுவதில் பாஜகவிற்கு நலன் இருப்பதால் அவர்கள் அதனைச் செய்கிறார்கள்.
சித்தாந்தம் என்று பார்த்தால், நாட்டில் உள்ள வேறு எந்தக்கட்சியையும் விட காங்கிரஸ் கட்சிக்குத்தான் நேதாஜியுடன் நிறைய ஒற்றுமைகள் உள்ளன, என அனிதா போஸ் பாஃப் தெரிவித்துள்ளார்.
From around the web