நிதி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!! ரிசர்வ் வங்கி கறார்!!

 
அசத்தல்! பளபள 100 ரூபாய் நோட்டு அறிமுகம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை திரும்பப் பெற நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. ஆனால் இவை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது நேற்று கூடுதலான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ரிசர்வ்

அந்த உத்தரவில், ‘‘வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களிடம் பணிபுரியும் கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடன் பெற்றவர்களுக்கு எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசியில் பேசி கடன் பற்றி விவரங்கள் சேகரிக்கும் போது எந்த மிரட்டல்கள் விடுக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக கடன் தவணையை செலுத்தக் கோரி இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பாகவும் தொலைபேசியில் அழைக்கக் கூடாது.

வீட்டு கடன்

இந்த கூடுதல் உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்’’ என்று கூறப்பட்டுள்ளது.இந்த புதிய வழிகாட்டு நெறிமுறை உத்தரவால் கடன் வாங்கியவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web