இனி ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு! உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

 
பேராசிரியை தற்கொலை

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை விஷயத்தில் புதிய கட்டுபாடுகளை விதித்திருக்கிறது உயர் கல்வித்துறை. இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களிடையே வரவேற்பும் எழுந்துள்ளது. சமீபமாக மாணவ, மாணவிகளை நல்வழிப் படுத்த வேண்டிய ஆசிரிய பெருமக்களிலேயே சிலர், வரம்பு மீறி, அவர்களது எதிர்காலத்தைப் பாழாக்குகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக  பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன்  மூலம்  பாடங்கள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்தன. இதன் அடிப்படையில்  தமிழக அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது.

கல்லூரி பேராசிரியை

மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,அவர்களின் செயல்பாடுகள் குறித்து உறுதி செய்யவும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி பேராசிரியை

அதன்படி கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் போன்ற மேலாடையை சீருடை போல் அணிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகள் தெரியாதவகையில் கண்ணியமிக்க ஆடைகளை  அணிந்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவு உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web