மாணவி ஸ்ரீமதி வழக்கில் புதிய ஆதாரம்! தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தை!

 
ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

ஸ்ரீமதி

மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் தாய் செல்வி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

ஸ்ரீமதி

இந்நிலையில், மாணவி உயிரிழந்த ஜூலை 13ம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web