இந்திய அணிக்கு புது ஜெர்சி! வீர நடைப் போடும் கிரிக்கெட் வீரர்கள்!

 
கிரிக்கெட் புது ஜெர்சி

புது ஜெர்சி அணிந்த படி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் செம மிடுக்காக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம், ஏன் இத்தனை கொடூரமான டிசைனைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்கிற கமெண்ட்களும் வந்து விழுகின்றன. டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை அணிந்து கொண்டு இந்திய வீரர்கள் வீரநடைபோடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் நேற்று இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான நீலநிலறத்தில் இந்த ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007&2008ம் ஆண்டுக்கு இடையில் ஜெர்சி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது கிரிக்கெட் அணியை தலைமை தாங்கிய கேப்டன் தோனி உலகக்கோப்பையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.

கிரிக்கெட் புது ஜெர்சி

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜெர்சி குறுத்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இது உங்களுக்கானது. எம்.பி.எல். ஸ்போர்ட்ஸ் மூலம் புதிய டி20 ஜெர்சி, ஒன் ப்ளூ ஜெர்சியையும் வழங்குகிறோம்’’ என்று பகிர்ந்துள்ளனர்.

கிரிக்கெட் புது ஜெர்சி

அதனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாம், ரோகித், ஹர்திக் பாண்டியா மற்றும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத்கவுர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் களைகட்ட உள்ளது. புதிய ஜெர்சியுடன் அணி வீரர்கள் பட்டையை கிளப்ப உள்ளதால், இந்திய ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் இந்தியா டி20 உலகக்கோப்பையை தட்டிச் செல்லும் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web