கோலிவுட்டுக்கு புதுவரவு!! சூர்யா 42 படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி அறிமுகம்!!

 
திஷா பதானி

நடிகர் சூர்யா   தனது 42வது படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியுடன்  இணைந்து நடித்துள்ளார். இந்த செய்தியை நடிகை பதானி  இன்ஸ்டா மூலம் உறுதிப்படுத்தினார். இது குறித்து திஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா 42 என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் "கோலிவுட்டுக்கு வரவேற்கிறோம்" என வாழ்த்த் தெரிவித்துள்ள்னார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இப்படத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானியுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட முண்ணனி நட்சத்திரங்கள் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

திஷா பதானி

நடிகர் சூர்யாவின் 42வது படம் என்பதால் தற்காலிகமாக ‘சூர்யா42’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பியது. மொத்தம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை திஷா பதானி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா42

அதில், ‘‘நடிகர் சூர்யா மற்றும் சிவா சாருடன் எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய அளவிலான பட்ஜெட் படத்தில் நானும் பங்கு வகிக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானது, மேலும் நான் இதுவரை நடித்திராத பாத்திரத்தை பார்வையாளர்களுக்கு அர்ப்பணிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்று மகிழ்ச்சி ததும்ப பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web