அடுத்த அதிர்ச்சி!! அரிசி, நெல் ஏற்றுமதிக்கு 20% வரி !! கலக்கத்தில் பொதுமக்கள்!!

 
அரிசி

உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பு. 2021ம் ஆண்டில் இந்தியா 21.5 மல்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது. இது உலகின் அடுத்த நான்கு பெரிய அரிசி ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் மொத்த ஏற்றுமதியை விட அதிகம்.

அரிசி

ஆனால் இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் 2022-23-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் எனவும் கூறப்பட்டது. இதனால் மத்திய அரசு நெல், அரிசி ஏற்றுமதிக்கு நடப்பாண்டு தடை விதிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுடான 1 மூட்டை பொன்னி அரிசி நேற்றைய நிலவரப்படி 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ.900. பொன்னி அரிசி விலை 1 மூட்டைக்கு 300 ரூபாய் உயர்ந்தது. பொன்னி பச்சை அரிசி விலையானது 1,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ.1,050. அதேபோல் 1 மூட்டை பாசுமதி அரிசி விலை ரூ.2,200-ல் இருந்து ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அரிசி

இந்நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி (நெல் அல்லது கரடுமுரடான), உமி செய்யப்பட்ட பழுப்பு அரிசி, அரை அரைக்கப்பட்ட அல்லது முழுமையாக அரைக்கப்பட்ட அரிசிக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த திடீர் வரி விதிப்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web