அடுத்த அதிர்ச்சி!! வேகமெடுக்கும் புது வைரஸ்!! ஒரே நேரத்தில் 5000 மாடுகள் உயிரிழப்பு!!

 
மாடுகள்

குஜராத்தில் உள்ள கச் மாவட்டத்தில் அதிகளவிலான மாடுகள் உயிரிழந்துள்ளன. இதன் சடலங்கள் புஜ் பகுதியில் குவியல் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட், ஜாம்நகர் பகுதிகளிலும் கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நோய் பரவலைத் தடுக்க ஜாம்நகர், கச், புஜ், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாடு
கால்நடை சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் குவியலாக  வைக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புஜ் முனிசிபல் நிர்வாக தலைவர் கன்ஷ்யம் தக்கார் கூறும்போது, ‘‘விரைவில் கால்நடைகளின் சடலங்களை குழி தோண்டி புதைப்போம். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பணிகளில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் 37,000 மாடுகள் கச் மாவட்டத்தில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 1,010 மாடுகள் இதுவரை இறந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1.65 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.


‘லம்பி ஸ்கின் வைரஸ்’ என்ற நோய் 1920ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கென்யா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவியது. ஈரப்பதம் அதிகமுள்ள பகுதிகளில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிகரிப்பின் மூலம் இந்நோய் பரவுகிறது. தற்போது இந்நோயால் தாக்கப்பட்ட மாடுகளின் தோலில் கட்டிகள் நிறைந்து காணப்படும்.

நோய் பாதித்த மாடுகளின் உயிரிழப்பு பெருமளவில் இருக்காது. இருப்பினும் அவை தரும் பாலின் அளவு குறையும். மேலும் சினை பிடிக்காது. அப்படியே பிடித்தாலும் அவை ஆரோக்கியமான கன்றுகளை பிரிசிவிக்காது என்றும் கூறப்படுகிறது.இதனால் கால்நடை வளர்த்து வருபவர்கள கவலை அடைந்துள்ளனர். நோய் வாய்ப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

மாடு

நாட்டு மாடுகள் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவை. இருப்பினும் அதிக பால் உற்பத்திக்காக கொண்டு வரப்பட்ட கலப்பின பசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவையாகவே உள்ளன. இதனால் கோமாரி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. இவைகளுக்கு தற்போது தடுப்பூசிகள் செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் அதுவும் கேரளாவில் தோல் கழலை (கட்டி) நோய் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web