அடுத்த அதிர்ச்சி!! இன்று முதல் ஏடிஎம் சேவை கட்டணம் உயர்வு!! வங்கி வாடிக்கையாளர்களே உஷார்!!

 
ஜனவரி முதல் ஏடிஎம் கட்டணங்கள் அதிகரிப்பு!!

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்  வங்கியின் ஏடிஎம் மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய முடியும்.

ஏடிஎம்

அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு பின் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம் மையங்களில் எடுக்கும் ஓவ்வொரு பணம் பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ .21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஏடிஎம்

தற்போது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் ஆகியவையை கருத்தில் கொண்டு ஏடிஎம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனை காண கட்டணத்தை தற்போது உயர்த்த தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் முடிவு எடுத்துள்ளன. இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web