அடுத்த அதிர்ச்சி!! இருமடங்காக உயர்த்தப்பட்ட மின் இணைப்பு கட்டணம்!!

 
மின்சாரம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 10ம் தேதி அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தற்போது புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், மின் மீட்டர் பொருத்தும் கட்டணம் ஆகியவையும் அதிகரித்துள்ளது. இருமடங்கு கட்டண உயர்வு அறிவிப்பை தொடர்ந்து பொது மக்கள் செய்வதறியாத விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

மின்சாரம் eb

அதன்படி, மின்கம்பங்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்க பகுதிகளில் காப்பீடு கட்டணமாக ரூ.750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.600 ஆக இருந்துள்ளது ரூ.150 வரை அதிகரித்துள்ளது. மேலும் இணைப்பு கட்டணம் ரூ.500ல் இருந்து இருமடங்காக உயர்ந்து ரூ.1,000 ஆகவும், பதிவுக்கட்டணம் ரூ.100ல் இருந்து இருமடங்காக உயர்ந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வளர்ச்சிக் கட்டணம் ரூ.1,400ல் இருந்து ரூ.2,800 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. வைப்புத் தொகை ரூ.200ல் இருந்து ரூ.100 அதிகரித்து தற்போது ரூ.300 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் மின் வினியோகம் செய்யப்படும் போது கேள்பி வழியாக கொடுக்கப்படும் ஒரு முனை மின் இணைப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.200 என உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சாரம்

மேலும் ரூ.5 ஆயிரமாக இருந்த வளர்ச்சிக் கட்டணம் தற்போது ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இணைப்புக் கட்டணம் ரூ.500ல் இருந்து இருமடங்காக உயர்ந்து ரூ.1,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மின் கட்டண உயர்வையே தாங்கிக் கொள்ள முடியாமல் பொது மக்கள் திணறி வரும் நிலையில், தற்போது சேவைக் கட்டணமும் அதிகரித்துள்ளதால் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது பரபரப்பு நிலவுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web