இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!! உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!!

 
தங்கம்

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசே தனிதான். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படுவது தங்கத்தின் மீதான முதலீடு தான். இதனைப் பயன்படுத்தி  தங்கத்தை  பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்ந்து வருகிறது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள்,  நகைப்பிரியர்கள் மிகுந்த  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 39 ரூபாய் உயர்ந்து, ரூ.4,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து, ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,015-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.68,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web