இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!! காய்ந்த மிளகாய் வரலாறு காணாத விலை உயர்வு!!

 
காய்ந்த மிளகாய்


தமிழகத்திற்கு தேவையான காய்ந்த மிளகாய் உற்பத்தி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர அண்டைமாநிலமான ஆந்திராவிலிருந்தும் மிளகாய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக காய்ந்த மிளகாய் சாகுபடி குறைந்துள்ளது.

காய்ந்த மிளகாய்

இதனால்  10 நாட்களுக்கு முன் வரை கிலோ ரூ180க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது காய்ந்த மிளகாய் விலை கிலோவிற்கு ரூ300ஆக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

காய்ந்த மிளகாய்
இது குறித்து பெருவியாபாரிகள் விடுத்த செய்திக்குறிப்பில் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த  மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இது தவிர  அரேபிய நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதனால் காய்ந்த மிளகாய் விலை இருமடங்காக உயர்ந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். வழக்கமாக மழைக் காலங்களில் காய்ந்த மிளகாய் பூண்டு இவைகளின் விலை உயர்வது வழக்கமான ஒன்று  தான். இருந்த போதிலும்  இந்த வருடம் போல் எந்த வருடமும் காய்ந்த  மிளகாயின் விலை உயர்ந்ததில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web