‘விஜய் 67’ படத்தின் அடுத்த அப்டேட்!! ரசிகர்கள் ஆவல்!!

 
விஜய்

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்இதற்கான பூஜை கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று  விஜய் 67 திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது.  லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்  இன்று திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று  வருகிறது.   

விஜய் ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்!  HBD விஜய் ஸ்டார்ட்ஸ்!

அறிவிப்பு  டீசர்  படப்பிடிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

From around the web