நடிகை நித்யா மேனனுக்கு திருமணம்? ரசிகர்கள் மகிழ்ச்சி!!!

மலையாள  உச்ச  நட்சத்திரத்தை  கரம்  பிடிக்கும்  நடிகை  நித்யா  மேனன்.  

 
நித்யா  மேனன்

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான  நித்யா மேனன் தற்போது ’மாடர்ன் லவ்என்ற தெலுங்கு வெப்தொடரில் நடித்து வருகிறார். இவர் தனுஷ் தற்போது நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது.

மேலும்,  விஜய் சேதுபதியுடன் மலையாளத்தில் 19 என்னும் படத்திலும், தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் ஆறாம் திருக்கல்பனை என்னும் மலையாள படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேனன் கடைசியாக பீம்லா நாயக் என்னும் தெலுங்கு படத்தில் தோன்றியிருந்தார். இவர்  ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற நித்தியா மேனன் 2006 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் முதல் முறையாக தோன்றியிருந்தார். அப்போது அவருக்கு 17 வயது.

 இந்நிலையில் நித்யா மேனன் குறித்த  ஒரு புதிய சுவாரிசியமான தகவல் வெறியாகியுள்ளது. அவர் விரைவில்  திருமணம் செய்ய போவதாகவும்,  அவர் திருமணம் செய்யும் நபர் மலையாள உச்ச நட்சத்திரம்  எனவும் கூறப்படுகிறது.  ஆனால்  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகத நிலையில் நடிகை நித்யா மேனனின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.