தீவிர மழைக்கு வாய்ப்பு இல்லை!! வெதர்மேன் ரிப்போர்ட்!!

 
இன்று இரவு அச்சச்சோ!! வெதர்மேன் பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகனமழைகள் வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். சென்னையை பொறுத்தவரை முக்கிய சாலைகள் மழைநீரால் வெள்ளக்காடாய் காட்சிஅளித்தன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தற்போது சென்னை உட்பட வடபகுதிகளில்  மழை வெகுவாக குறைந்துவிட்டது.

வெதர் ரிப்போர்ட்

பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக காலை தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி  இன்று காலை முதலே  சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை. இனி வரும் நேரங்களிலும் இதே நிலை நீடிக்கும். பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராக வேண்டியது தான். மழை சென்னையில் இருந்து மழை கடலூர் பெல்ட் நோக்கி நகர்ந்துள்ளது. இதனையடுத்து மழையின் போக்கு  டெல்டா மற்றும் தெற்கு பெல்ட் நோக்கி நகரும்

மழை நிலவரம் !! வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்!!

 இதனால் விருதுநகர், ராமதாபுரம் மதுரை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்யக்கூடும். இனி வரும் அடுத்த 2 நாட்களும் டெல்டா, தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.  மேலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். அதே நேரத்தில் இனி இந்த பகுதிகளில் தற்போதைக்கு  தீவிர மழைக்கு வாய்ப்பு கிடையாது என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web