இரட்டை இலை இல்லையாம்? புல்லட்க்கு தயாராகும் ஈபிஎஸ் அணி!!

 
bulla

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் வெற்றியோ தோல்வியோ, தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர். இதனால் யாருக்கு சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் இப்போது எழுந்துள்ளது.

ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

bulla

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் இருவரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட இரு அணியினரும் தீவிரமாகி வருகின்றனர். ஏற்கனவே ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்தனர். ஆனால், பறவைகளை சுயேட்சை சின்னமாக ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தற்போது நிறுத்தி விட்டது. 

bulla

இதையடுத்து எடப்பாடி அணியினர் ‘புல்லட்’ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணிக்கு, அவர்கள் கேட்கும் புல்லட் சின்னம் கிடைக்குமா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.


 

From around the web