கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை!! தட்டுப்பாடு ஏற்படுமா?

 
கோதுமை

உலக அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் போரினால் கோதுமை அதிகமான விலையேற்றம் கண்டது. மேலும் உலகம் முழுவதும் உருவான  வெப்ப அலையினால் பயிர் சேதமடைந்தது. இந்தியாவில்  கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை.

கோதுமை

ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை  2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தி 10.96 கோடி டன். நடப்பாண்டில் இது இன்னும் குறைந்துள்ளது. இருப்பினும், 2016-17 லிருந்து கடந்த 5 ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியை விட அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது.இதனை  ஜூலை 1ம் தேதி நரேந்திர சிங் தோமா் தெரிவித்திருந்தார். 

கோதுமை
தற்போது இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு நமது நாட்டிலே உள்ளது. இந்திய உணவுக் கழகம் பொது விநியோகத்திற்கான போதுமான இருப்பையும் கொண்டுள்ளது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web