இலவச வேட்டி, சேலைக்கு டெண்டர் தேதி அறிவிப்பு!! தமிழக அரசு அதிரடி!!!

 
இலவச வேட்டி, சேலை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான பருத்திநூல் வாங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை  தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இலவச வேட்டி, சேலை

இதன் மூலம் கைத்தறி நெசவாளர்கள் 15000 பேர் மற்றும் விசைத்தறி நெசவாளர்களில் 54000 பேரும் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இந்த திட்டம் தமிழக அரசால் கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கும் இத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசைத்தறி
அதன்படி 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி டெண்டரின் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நியாயவிலைக் கடைகளின் மூலம் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்வர் அறிவிப்பினைத் தொடர்ந்து தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பயன் அடைவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web