பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு! அசல் சான்றிதழை 31ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்!

 
தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழை இம்மாதம் 31ம் தேதி முதல் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2021-2022 ம் கல்வியாண்டில் 1முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 6.49 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்தது.

இதில் 12ம் வகுப்பில் மட்டும் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்களில் சிலர் தேர்வில் பங்கேற்கவில்லை சிலர் தேர்ச்சி பெறவில்லை. அதேபோல் 10-ம் வகுப்பில், மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இதனையடுத்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றது. 

டிஎன்பிஎசி   தேர்வு  தேதியில்  திடீர்  மாற்றம்

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web