இனி 17 வயசுலேயே வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு!

 
தேர்தல் வாக்குப்பதிவு கல்லூரி மாணவிகள் வோட்டு

குட் நியூஸ்... இனி 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே உங்களுக்கு 17வது வயது நிறைவடைந்த உடனே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என விதிமுறை உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும். வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பியவுடனே (ஜனவரி 1-ம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.

தேர்தல் வாக்குபதிவு வோட்டு தேர்தல்

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய நடைமுறையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, “18 வயது பூர்த்தியாகும் வரை வாக்காளர் அட்டைக்காக காத்திருக்க தேவையில்லை. 17 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அதுசார்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இணைந்து உத்தரவிட்டுள்ளனர். 

தேர்தல்

இதனால் 12ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்த வாக்காளர்கள் தனது முதல் வாக்கை பதிவு செய்யலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web