செம!! டெலிகிராமில் லேட்டஸ்ட் அப்டேட்!! படம் வரையலாம்!! ஃப்ரோபைல் பிக்சர மாத்தலாம்!!...

 
முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

செய்தி பகிரும் தளங்களில் பிரபலமாக வலம் வரும் டெலிகிராம் செயலி, பயனர்களுக்கு பல புதிய அப்டேட்டுகளை வழங்கி, வாட்ஸ்அப் தளத்திற்கு நேரடி போட்டியாளராக உள்ளது. பெரிய கோப்புகள், குழுக்கள் போன்றவற்றில் டெலிகிராம் முன்னிலை வகிக்கிறது.

பயனர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், டெலிகிராம் நிறுவனம் பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது iOS பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த அப்டேட் மூலம் டிராயிங் வரையும் கருவிகள், கான்டக்ட்ஸில் உள்ளவர்களின் ப்ரொபைல் படங்களை மாற்றுவதற்கான வசதி வந்துள்ளன.

ஜீரோ ஸ்டோரேஜ் (Zero storage user):

ஸ்மார்ட்போனில் குறைந்த மெமரியுடன் டெலிகிராமைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறந்த அம்சமாகும். இந்த அம்சம் அனைத்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிகிராம் கிளவுட்டில் சேமிக்கும், தேவைப்படும்போது பதிவிறக்கம் செய்யலாம். பயனர்கள் இப்போது கேச் அளவை (ஸ்மார்ட்போனில் டெலிகிராம் எவ்வளவு சேமிப்பகத்தைப் பயன்படுத்தலாம்) மற்றும் கேச் மீடியாவை (ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம்) எப்போது டெலிட் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம், இது தானாகவே ஸ்மார்ட்போனில் உள்ள மெமரியை நிரம்பாமல் பார்த்துக் கொள்ளும்.

Telegram

புதிய டிராயிங் டூல்ஸ்:

டெலிகிராமில் புதிதாக டிராயிங் டூல்ஸ் வந்துள்ளன. அதில் மங்கலாக்கும் வசதி, இமெஜ்களில் எழுத்துக்களைச் சேர்க்கும் வசதி, ஈமோஜிகளை சேர்க்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளன.

ஹிடன் மீடியா:

நீங்கள் இப்போது டெலிகிராமில் ஹிடன் மீடியாவை அனுப்பலாம். அதாவது நீங்கள் மின்னும் லேயருடன் படம் அல்லது வீடியோவை அனுப்ப வேண்டும்,  எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அனுப்பியுள்ள மீடியாவைத் திறந்தவுடன் அவை தானாகவே மறைந்துவிடும். டெலிகிராமில் ஹிடன் மீடியாவை அனுப்ப attachment மெனுவிற்குச் சென்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீடியாவைத் தேர்ந்தெடுத்து, டெலிகிராம் அரட்டையில் உங்கள் புகைப்படத்தில் Hide With Spoiler என்பதைக் கிளிக் செய்யவும். 

Telegram

புதிய ஃப்ரொபைல் இமேஜ் வசதிகள்:

உங்கள் கான்டக்ஸில் உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக நீங்களே ஒரு ப்ரொபைல் பிக்சர்களை வைக்கலாம். இந்த ப்ரொபைல் பிக்சர் ஆனது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதேபோல், நீங்களும் ஒரு பொதுவான சுயவிவரப் படத்தையும் அமைக்கலாம், அது மற்ற அனைவருக்கும் தெரியும்.