நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை! தமிழகத்தில் தொடரும் சோகம்!

 
கார்த்திகா தேவி

தமிழகத்தில் தொடரும் சோகமாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அதிகளவிலான மன அழுத்தமே மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாக பெரும்பாலான சம்பவங்களில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், நேற்று குடியாத்தம்  அருகே  நர்சிங்  கல்லூரி  மாணவி, அவரது வீட்டில்  தூக்கிட்டு  தற்கொலை செய்து  கொண்டுள்ள  சம்பவம்  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடந்து, தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்தும் தற்போது பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகளின் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறப்பிலிருந்து வெளிவர முடியத நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் அடுத்தடுத்த தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி . இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில்  பிஎஸ்சி  நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்த படியே கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் நேற்று முன்தினம் கல்லூரி விடுதிக்குச் சென்று மகள் கார்த்திகாதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். 

அப்போது அவர், கல்லூரி பெண் முதல்வர், தனது தேர்ச்சி சதவீதத்தை குறைத்துவிடுவதாக கூறி அடிக்கடி டார்ச்சர் செய்து வருவதாகவும், இதனால் மன உளைச்சலாக உள்ளதாகவும் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.  இந்நிலையில், நேற்று அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.  இதனை கண்ட  அவரது  பெற்றோர்கள்  அதிர்ச்சி  அடைந்து,  இது குறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்சிங் கல்லூரி மாணவி துக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web