அட!! ஏழைகளுக்கான சாப்பாடு சரியில்லை!! மேலாளரை அறைந்த எம்.எல்.ஏ!!

 
எம் எல் ஏ

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரியில்லை எனக் கூறி எம்.எல்.ஏ., பங்கர் அறைந்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு சரியில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறிய பங்கர், உணவு வழங்கப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கோண்டார். அப்போது, உணவை தயாரித்த உணவு மேலாளரை அழைத்து அறைந்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

kamadenu

தனது செயலை நியாயப்படுத்தி பங்கர் கூறுகையில், இரவு பகலாக உழைக்கும் ஏழை மக்களுக்கு நல்ல சாப்பாடு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு உழைத்து வருகிறது. ஆனால், சில ஒப்பந்ததாரர்கள் ஊழல் செய்கின்றனர். சாப்பாட்டில் கத்தரிக்காய், கேரட் இல்லை. மோசமான அரிசியும், பருப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பூச்சிகள் கிடந்தன. இது குறித்து முதல்வரிடம் புகார் கூறி, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். 

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எங்களுடன் இருந்தனர். அவர்கள் எங்களது குரலை கேட்கவில்லை. மாறாக அடக்குவதில் தான் குறியாக இருந்தனர். தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதனால், எங்களது குரல்கள் எழ துவங்கி உள்ளது. நாங்கள் பால்தாக்கரே தொண்டர்கள். அநீதி எழுந்தால், எங்களது குரலை எழுப்புவோம் என்றார்.மதிய உணவு திட்டத்தில் மோசமான உணவு வழங்கியதாக கூறி, அதனை தயாரித்த நிறுவனத்தின் மேலாளரை அறைந்த, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ., செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web