அட!! பெண்குழந்தை பிறந்தால் பிரவசக் கட்டணம் கிடையாது!! அசத்தும் மருத்துவர்!!

 
கணேஷ்


இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பெண்சிசு கொலைகள் தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் பெண்களை காக்கவும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும், நடவடிக்கைகளை அரசு  மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  இவைகளுடன் ஆங்காங்கே தனிமனிதர்களும் செய்து வருகின்றனர். புனேவில் வசித்துவரும் மகப்பேறு மருத்துவர் கணேஷ். இவர்  கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில்  மகப்பேறு மற்றும் பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார். பிரசவத்தின் போது பெண் குழந்தை பிறந்தால் கட்டணம் வசூலிக்காமல் மருத்துவசேவை செய்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. 

குழந்தை


இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் மட்டும் சுமார் 6  கோடிக்கும் மேற்பட்ட  பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி உள்ளது. இதுபோன்ற கொடுமைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்ல. இந்தியா  மாநிலம், நகரங்கள் என்ற வரையறையை கடந்து உலகம் முழுவதுமாக இந்த கொடுமை அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்திலும்  பெண் குழந்தைகள் பிறக்கும்போது பல குடும்பத்தினர் குழந்தையை வந்து பார்க்க கூட தயக்கம் காட்டிவருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  இதனை களையவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மிகச்சிறிய அளவில்  எங்கள் மருத்துவமனை சார்பில் பெண்குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

கேக்

இத்திட்டத்தின் மூலம்  பெண் குழந்தைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மருத்துவ கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கடந்த 11 வருடங்களில் 2,400 பெண் குழந்தைகள் எங்கள் மருத்துவமனையில் இலவசமாக பிரசவிக்கப்பட்டுள்ளன. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பெண் குழந்தை பிறந்து பிரசவித்த தாய்மார்கள் வீடு திரும்பும்போது அவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த சேவைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web