அட!! மோப்ப நாய்க்கு ரெட் கார்ப்பெட்!! விமானநிலையத்தில் அட்ராசிட்டி!!

 
ராணி நாய்

சென்னையில் சர்வதேச  விமான நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு எந்நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இருக்கும். தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் டிக்கெட் மற்றும் உடமைகள் சோதனை உட்பட அனைத்து வகையான சோதனைகளையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தான் செய்து வருகின்றனர்.

ராணி

அதே போல்  வெடி பொருட்கள், ரசாயனங்கள், போதைப் பொருள்கள் போன்றவற்றை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2012 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணி என்கிற மோப்பநாய்க்கு  வயது மூப்பின் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கான பிரிவு உபச்சார விழா . ராணியின் பணியை கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. இதற்கான விழா மத்திய தொழிற்படை அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ராணி மோப்ப நாய்க்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து மெடல் வழங்கப்பட்டது.  ராணி மோப்ப நாயை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஜிப்பில் ஏற்றி கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

 

இதனை பராமரித்து வந்த முத்துக்குமார்  சென்னை விமானநிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்னுடன் பாதுக்காப்பு பணியில் பணி புரிந்து வந்தது.  ராணி இதுவரையும் தன்னுடைய பணியிலிருந்து முரண்பட்டது இல்லை. கட்டளைகளுக்கு உடனே கீழ்ப்படியும். இதுவரையும் ராணி ரு உடல் உபாதையால் பணிக்கு மட்டம் போட்டதில்லை.  வெடி பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கண்டறிவதில் துல்லியமாக செயல்படும் என உரையாற்றி பெருமிதப்படுத்தினார். இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் தற்போது ஒன்பது மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

 மேலும் 2 மோப்ப நாய்கள் நவம்பர் மாதத்தில் பயிற்சி முடித்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் சேர உள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் தற்போது 8 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. கூடுதலாக 8 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்களின் பங்கு மிக மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web