அட!! பூனையை கண்டுபிடித்து தந்தால் ரூ10000 சன்மானம்!!

 
ஜோஷி

வீடுகளில் ஆடு, கோழி, நாய், பூனை, லவ்பேர்ட்ஸ் என செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றன. அவை உரிமையாளரிடம் சலுகையுடன் கொஞ்சுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்சை அள்ளி வருகின்றனர். பொதுவாக செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் மன அழுத்தம் குறைவதாக உளவியல் வல்லுனர்கள் கூறுவர். ஒரு படி மேலே போய் சிலர் அதனை வீட்டில் ஒரு உறுப்பினராகவே சிலர் அதனை நடத்துவர்.

பூனை

அவைகள் சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, வழி தவறி காணாமல் போய்விட்டாலோ கதறி அழுவர். இதே போல் ஒரு  சம்பவம் கடலூர் நகரில் நடந்துள்ளது. கடலுார் நகரின் பல இடங்களில் நேற்று, ‘காணவில்லை’ என்ற தலைப்பில் பூனை படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. 

அந்த சுவரொட்டியில், வெள்ளை நிற ஆண் பூனை, தலை மற்றும் வால் பகுதியில் சந்தன நிறம் இருக்கும். பூனை பெயர் ஜோஷி, வயது 3. ஒரு மாதத்திற்கு மேல் காணவில்லை. வழி மாறி யார் வீட்டிலாவது தங்கி இருக்கலாம். 4 திசைகளிலும் தேடி உதவவும். ஜோஷி என்று கூப்பிட்டால் உங்களை பார்க்கும். அடையாளம் சரியாக பார்த்து போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்புங்கள் என்று குறிப்பிட்ட முகவரி, செல்போன் எண், பூனை படம் ஆகியவற்றையும் சேர்த்து ஒட்டி உள்ளனர். 

கடலூர்

இந்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வினோத சுவரொட்டியை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீட்டில் உள்ளவர்களை காணவில்லை என்றால் அவரை தேடி சுவரொட்டி ஒட்டும் காலம் மாறி, தற்போது செல்ல பிராணிகளை சுவரொட்டி ஒட்டி தேடும் சம்பவம் கடலூரில் வினோதத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web