அய்.. ஜாலி!! பாராசூட்டில் விண்வெளிக்கு பறக்கலாம்!! சோதனை வெற்றி!

 
பாராசூட்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை முழு வெற்றி அடைந்து வீடியோ வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் இஸ்ரோ  ககன்யான் பணியின் ஒரு பெரிய சோதனையை செய்துள்ளது. அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியாக ககன்யான் தரையிறங்கும் பாராஷூட் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 
 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இரண்டின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது. 

தனியார் ராக்கெட்
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் , உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பாபினா ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் பாராசூட் ஏர் டிராப் சோதனை நடத்தப்பட்டது.  அடுத்த ஆண்டுக்குள் பூமியிலிருந்து முதல் விண்வெளிப் பயணத்தை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மனிதர்கள் வெற்றிகரமாக பாதுகாப்புடன் விண்வெளி பயணம் சென்றுவரமுடியும். இத்திட்டத்தின் படி மனிதர்களை ஏந்தி வரும் 'க்ரூ மாட்யூல்' மாஸ்ஸுக்கு சமமான 5டன் டம்மி மாஸ் , 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய விமானப்படையின் IL-76 விமானத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இரண்டு சிறிய பைரோ அடிப்படையிலான மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு பத்திரமாக  பாராசூட் மூலம்தரை இறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

தனியார் ராக்கெட்
ககன்யான் க்ரூ தொகுதி அமைப்பு மொத்தம் 10 பாராசூட்களை வைத்துள்ளது. விமானத்தில், 2 பிரதான பாராசூட் வரிசைகள், வேகத்தை நிலைப்படுத்தவும் குறைக்கவும் 2 ட்ரோக் பாராசூட்கள் பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பாராசூட்டின் செயல்திறனும் பலவிதமான பரிசோதனைகளுக்கு பிறகே செய்யப்படுகிறது. எதிர்பாராதவிதமாக பாராசூட் தோல்வியடையும் நிலையில் அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. . ககன்யானின் பாகங்கள் எல்லாம் தனி தனியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web