வட போச்சே!! SSLV D1 ராக்கெட் மிஷன் தோல்வி !! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
எஸ் எஸ் எல்வி

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான  இஸ்ரோவின் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.  புவி கண்காணிப்பிற்கு இஒஎஸ்-02 என்ற செயற்கை கோள் மற்றும் கிராமப்புற மாணவிகள் உருவாக்கிய அசாதி சாட் செயற்கைகோள் இவைகளுடன் எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் எதுவும் வரவில்லை என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

ராக்கெட்

விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து முதல், 2வது, 3வது நிலைகளை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததாகவும் ஆனால் இறுதி கட்டத்தில் செயற்கைகோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை எனவும்  இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொடர்ந்து செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டை மீண்டும் தொடர்புகொள்ளும் முயற்சிகளும், சிக்னலை மீண்டும் உறுதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்றன. இருந்த போதிலும் பயன் எதுவும் இல்லை. இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.வி டி1 சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ராக்கெட்

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட்டில் ஏவிய இஓஎஸ்-02, ஆசாதி சாட் செயற்கைக் கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 2 செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த இயலாது சென்சார் செயலிழப்பால் ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறி விட்டன. இதனால்  செயற்கைக்கோள்கள் வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web