ஒலிம்பிக் தான் கனவு… சாதிக்க துடிக்கும் மதுரை மாணவி…

 
சாதனை மாணவி

தூங்கா நகரம், என்று அடையாளம் சொல்லப்படும் மதுரை மாநகரம் தற்போது விளையாட்டு வீரர்களின் முக்கிய அடையாளமாக மாறி வருகின்றது.  ஆம்.. மதுரை அரசு மகளிர் கல்லூரி படித்து வரும் மாணவி   பீட்சா கடையில் பகுதி நேரமாக பணிபுரிந்துகொண்டே சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சாதனை புரிந்துள்ளார். மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ராஜபாண்டி மகள் ஆர்.வர்ஷினி. இவருக்கு வயது 21. இவரது தாயார் கவிதா ஊருக்கு அருகிலுள்ள டிவிஎஸ் டயர் கம்பெனியில் கூலி வேலை செய்கிறார். வர்ஷனி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படிக்கிறார்.

சாதனை மா

குத்துச்சண்டை வீராங்கனையான வர்ஷினி சமீபத்தில் டெல்லியில் நடந்த சர்வதேச கால் குத்துச்சண்டை   போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இவருடன் லேடி டோக் கல்லூரி மாணவிகள் ஷீபா கெட்சியா, தாரணி, அனிதா, சரிகா, கோகிலா ஈஸ்வரி மற்றும் வக்போர்டு கல்லூரி மாணவர் நவனீதகிருஷ்ணன், தியாகராசர் கல்லூரி மாணவர் சைலேந்திர பாபு, விருதுநகர் மாணவர் விக்னேஷ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர். மகளிர் பிரிவில், வர்ஷனி உட்பட 6 பேரும் தங்கப் பதக்கமும், இவர்களுடன் பங்கேற்ற மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஓட்டல் தொழிலாளியின் மகள் சர்வதேச போட்டில் தங்கம் வென்ற செய்தியை அறிந்த வெள்ளரிப்பட்டி கிராம மக்கள் அந்த மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

குத்துசண்டை

இதனிடையே சொந்த ஊர் திரும்பிய சாதனை மாணவிக்கு மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர்  வானதி தலைமையில் பேராசிரியைகள், சக மாணவிகளும் வரவேற்பு தந்து உற்சாகப்படுத்தினர். அவருக்கு ஆளுயுர மாலை அணிவித்தும் மகிழ்வித்தனர். அப்போது வர்ஹினி கூறியதாவது, ''வரவேற்பும், உற்சாகமும் தன்னை மேலும், வளர்த்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது'' உலகளவில் சாம்பியன் பெற்று, ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது லட்சியம். இதற்கான இலக்கு நிர்ணயித்து பயிற்சி எடுப்பேன். என்றார்.  

From around the web