ஓணம் கொண்டாட்டம்! துரத்தும் கனமழை! மதுரைமல்லி ஒரு கிலோ ரூ.3,000!

 
புவிசார் குறியீட்டு சான்றிதழ்: மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

செப்டம்பர் 8ம் தேதி ஒணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கேரள சகோதரர்கள் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடவில்லை. ஒரு புறம் கொரோனா ஊரடங்கு, கனமழை வெள்ள சேதம், பறவைக் காய்ச்சல் என்று கடவுளின் தேசம் சாத்தானின் பார்வையால் கடந்த இரு வருடங்களில் நிறையவே இழந்துள்ளது. இந்நிலையில், இந்த வருட ஓணம் பண்டிகைக்கு இப்போதில் இருந்தே தங்களது மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்க கேரளாவில் தயாராகி விட்டார்கள். தினந்தோறும் டன் கணக்கில் பூக்கள் கேரளாவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையிலும், சுற்றுப்புற பகுதிகளான திண்டுக்கல், தேனி, வத்தலகுண்டு போன்ற பகுதிகளிலும் தொடர் கனமழை மற்றும் வரத்து குறைவு, ஓணம் பண்டிகைக்காக கேரளாவுக்கு அதிகளவில் பூக்கள் தேவை போன்ற  காரணங்களால் மதுரையில் மல்லிகை பூ ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புவிசார் குறியீட்டு சான்றிதழ்: மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி

ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள், கனமழை, வரத்து குறைவு ஒருபுறம் இருக்க, ஆடி மாதம் முடிந்து நாளை  முதல்  வளர்பிறை  முகூர்த்தம்  என்பதாலும்  பூக்களின்  விலை  உச்சத்தை  அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று 2,500 விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று காலை கிலோ ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் மற்ற பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய், முல்லைப் பூ கிலோ 1000 ரூபாய், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய், செவ்வந்திப்பூ கிலோ 250 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 250 ரூபாய் என பூக்களின் விலை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

malli

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பூக்களின் விலை மேலும் உயர கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web