ரயில் மோதி மேலும் ஒரு கல்லூரி மாணவர் பலி!! தொடரும் சோகம்!!

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் கோதாவரி பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனு. இவருடைய மகன் 18 வயது நல்லபோத்ல ரெங்கையா . இவர், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிடெக் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கும்பகோணத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்தார். நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை இரவு தன்னுடைய தோழரை சந்தித்து விட்டு வருவதாக அறை நண்பரிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.
அன்றைய தினமே நள்ளிரவில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தியோதயா விரைவு ரயிலில், கும்பகோணத்தில் இளைஞர் அடிபட்டு இறந்துவிட்டதாக ரயில் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை மீட்டு ஆய்வு நடத்தியது. அருகில் கிடந்த செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் தகவல் அளித்தனர். அதன் பேரில் அந்த இளைஞன், ரங்கையா என்றும், கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக்கழக மாணவன் எனவும் உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவனின் உடல் பிரேதபரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவனின் பெற்றோர் மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!