ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்.! தொடரும் அவலம்!!

 
மாணவர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சங்கர். வயது 29. என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது. இதில் லட்சகணக்கான பணத்தை இழந்து கடன் தொல்லையால் அவதி பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டல் மேனேஜர் சிவதாசன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ஒருவர் பலி

மேலும்   ஓட்டல் அறையில் சோதனை செய்த போது, சங்கர் எழுதிய ஒரு கடிதத்தை போலிசார் கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைத்திருந்தார். எனவே, அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார்? என்றும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கோவை என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

From around the web