அச்சச்சோ!! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! மீண்டும் அதிகனமழை அலர்ட்?!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29 மாவட்டங்களில் கடந்த வாரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும்  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் நவம்பர் 20ம் தேதி நாளை மறுநாள் கனமழையும் , நவம்பர் 21, 22 தேதிகளில் வட தமிழகத்தில்  மிககனமழையும் பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை

ஏற்கனவே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருப்பவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் மொபைல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை பதிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மீனவர்கள் தங்களுடைய படகு, மீன்பிடி வலை இவைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web