அச்சச்சோ!! வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு!! மேலும் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

 
மழை

இந்தியா முழுவதும் பருவ மழை காரணமாக தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.  அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில தலைநகரான  பெங்களூருவில் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மாநிலத்தில் அணைகள், ஏரி, குளங்கள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. 5க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து  நகருக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.  குடியிருப்புகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. 

மழை
பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பேருந்துகள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளத்தை கட்டுப்படுத்த  அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள இருப்பதாக ஐடி நிறுவனங்கள் அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தன. நேற்று முன் தினம் பெய்த பெருமழையில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து அடுக்குமாடி கட்டிடங்களை சூழ்ந்துள்ளது.

மஞ்சள் அலர்ட்

75 ஆண்டுகளில் இல்லாத அலவு பெங்களூரில் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.  மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டு அழைத்து வருகின்றனர். வீடுகளில் இருந்த மக்களுக்கு பால், பிஸ்கட், பிரட் உட்பட உணவு பொட்டலங்களை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சென்று விநியோகம் செய்து வருகின்றது.

வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டன. மேலும்  கர்நாடகத்தில் இன்று செப்.6 முதல் 10ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் பெங்களூரு நகர் மற்றும் புறநகரில் 3 நாட்கள் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கர்நாடகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web