அச்சச்சோ!! மெரினா காந்தி சிலை இடம் மாற்றப்படுகிறதா?! பொதுமக்கள் அதிர்ச்சி!!

 
காந்திசிலை

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று  மெரினா கடற்கரை. இங்கு பல நினைவு சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது  1959ல் தேபி பிரசாத் ராய் சவுத்ரியால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர்  நேரு, முதலமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடியில் திறந்து வைக்கப்பட்ட  வெண்கல காந்தி சிலை. ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினத்தில் தமிழக கவர்னர், முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்கள், பிரபலங்கள்  காந்தி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

காந்திசிலை

அந்த சமயத்தில் நாட்டுப்பற்றையும், அவரது தியாகம் மற்றும் தொண்டை நினைவு கூறும் வகையில் தேசபக்தி பாடல் பாடுவது, ராட்டையில் நூல் நூற்பது நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் சுரங்கப்பாதையில்  அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது காந்தி சிலை அருகில் உள்ள இடங்கள் இரும்பு வேலி போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப்  பணியின்போது காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக காந்தி சிலையை பணி முடியும் வரை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காந்திசிலை

அதில் மெரினாவில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான காந்தி சிலை  சுரங்கம் தோண்டும் பணியின்போது சேதம் அடையாமல் இருக்க  பணி முடியும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது பொதுப்பணித்துறையினர் சிலையை அப்புறப்படுத்த உள்ளனர். இதற்கு முன்பு அதனை பாதுகாப்பாக வைக்க  கடற்கரை பகுதியிலேயே  இடத்தையும்  தேடி வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட பிறகு இரவு நேரத்தில்  சிலை பாதுகாப்பாக மாற்றப்பட உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் தற்போது இருக்கும் அதே இடத்தில் மீண்டும்  காந்தி சிலை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web