அச்சச்சோ!! குறும்படம், விளம்பரம், போட்டோஷூட் எடுக்க நிரந்தரத் தடை!! கெத்து காட்டும் தொல்லியல் துறை !!

 
திருமலை நாயக்கர் மஹால்

 

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை திருமலை நாயக்கர் மகால் தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கி வருகிறது. இது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கர் மஹால்

இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பழமை வாய்ந்த இந்த மகாலின் சுற்றுச்சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலை நாயக்கர் மகாலில் அனுமதியின்றி சிலர் அத்துமீறி நுழைந்து குறும்படம் எடுத்ததாக தெரிகிறது. மேலும் அப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமலை நாயக்கர் மஹாலில் எடுக்கப்பட்ட அந்த குறும்படத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் தைரியமாக வெளியிடப்பட்டு பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

 படப்பிடிப்பு
இது குறித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குநர் கூறும்போது, ‘‘மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறதுஉ மேலும் விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ ஷ¨ட்களை அப்பகுதியில் நடத்தவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

தற்போதைய கால கட்டத்தில் செல்போனை வைத்துக் கூட குறும்படம் இயக்குகிறேன் என்று பலர் பொது இடங்களில் அநாகரீமாக நடந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து திருமலை நாயக்கர் மகாலில் குறும்படம் எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web