அச்சச்சோ!! தமிழகமே இருளில் மூழ்கும் அபாயம்!! மின்சாரம் வாங்க, விற்க தடை!!

 
மின்சாரம்


13 மாநில அரசுகள் பாக்கி நிலுவை தொகை செலுத்த தவறியதால், மத்திய அரசு அவற்றுக்கு மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு பிரிவினருக்கு பல்வேறு கட்டணங்களில் மின்சாரத்தை வழங்குகிறது. தொழில்துறை பிரிவினரைத் தவிர, மற்ற பிரிவினருக்கு குறைந்த கட்டணத்திலோ அல்லது கட்டணமின்றியோ மின்சாரத்தை வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம்

நேற்று இரவு முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், மின்பகிர்மான நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.5,100 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அந்த தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மின்சாரம்
மேலும் மத்திய அரசின் தலையீட்டால் மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்படி பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் பாக்கி நிலுவை செலுத்த காரணத்தை சுட்டிக்காட்டி மின்சாரம் வாங்க, விற்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web