இரண்டரை ஆண்டுகளுக்கு பின் திறப்பு!! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!!

 
நுழைவாயில்

இந்தியா மற்றும்  பூடான் எல்லை நுழைவுவாயில்கள் அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த நுழைவு வாயில்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதை அடுத்து இருநாடுகளும் எல்லைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தியா

அதன்படி செப்டம்பர்  23ம் தேதி சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு நுழைவு வாயில் திறக்கப்பட உள்ளது. மேலும் பேச்சுவார்த்தை முடிவில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பயணங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன. செப்டம்பர்  23ம் தேதி இந்தியாவிற்கும்,  பூடானுக்கும்  நுழைவு வாயில்கள் திறக்கப்படுவது குறித்து பூடான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும்  3 புதிய வாயில் அமைக்கப்படுவதாகவும் இதனால் சுற்றுலா பயணிகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் பூடான் அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web