2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் ஆட்டோக்களை நிறுத்த உத்தரவு.. காற்றின் தர மேலாண்மை ஆணையம் அதிரடி!

 
ஆட்டோ

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ

மேலும் ஜனவரி 1, 2027 முதல் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி மற்றும் -ஆட்டோக்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஜனவரி 1 முதல் சிஎன்ஜி மற்றும் -ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.  2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் ஆட்டோக்களை தரவரிசையில் படிப்படியாக நிறுத்தவும் மூன்று மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ

டெல்லி, ஹரியானாவின் 14 மாவட்டங்கள், உத்தரபிரதேசத்தின் எட்டு மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் இரண்டு மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கியது. டீசல் ஆட்டோ ரிக்ஷாக்களை சிஎன்ஜியாக மாற்றும் திட்டத்தை 1998 ஆம் ஆண்டு டெல்லி தொடங்கியது. தற்போது டெல்லியில் டீசலில் இயங்கும் ஆட்டோ பதிவு செய்யப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

From around the web