உரிமையாளர்களே உஷார்!! சொத்துவரி செலுத்தலன்னா சீல் வைக்க உத்தரவு!!

 
சீல்

சென்னை மாநகராட்சி சொத்து உரிமையாளர்களை சொத்துவரி செலுத்த அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் சுமார்  12 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இன்னும் வரி செலுத்தாமல் உள்ளனர்.இவற்றில் சில  குடியிருப்பு வீடுகளாகவும்,  வணிக பகுதியாகவும் செயல்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை  சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்பட்டு வருகிறது. 

சீல்
தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டு உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும்.  அரசு இயந்திரம் இதனை வசூலிக்க வருவாய் துறையை வலியுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர். முதல் அரையாண்டு காலம் செப்டம்பர் மாதத்துடன் இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னை முழுவதுமான அரையாண்டு சொத்துவரி ரூ700கோடி. ஆனால்  இதுவரையில் ரூ.490 கோடி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது.  

இன்னும் ரூ.210 கோடி வசூலிக்க வேண்டிய நிலையில்  இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. புதிய சொத்துவரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த வேண்டும் என வீடு மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த மாத இறுதிக்குள் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் உரிமையாளர்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

இதேபோல தொழில் வரியும் ரூ250 கோடி வசூல் செய்யப்பட வேண்டியுள்ளது.  தொழில் செய்யக் கூடிய நிறுவனங்கள், தொழில் வரி செலுத்த வேண்டும்.  சென்னையில் சொத்து வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்கள்  சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தா விட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் எனவும் சென்னை  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web